ரஷ்யாவில் உக்ரைனுக்காக உளவு பார்த்த பொறியியலாளருக்கு நேர்ந்த கதி
உக்ரைனுக்கு (Ukraine) இராணுவத் தகவல்களை வழங்கிய குற்றத்திற்காக ரஷ்ய (Russia) பொறியியலாளர் ஒருவருக்கு தேசத் துரோகத்திற்காக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டனில் முகமெடோவ் (32) என்ற இந்த நபர் ரஷ்யாவின் Urals இல் உள்ள Uralvagonzavod இல் பொறியாளராக பணிபுரிந்துள்ளார்.
குற்றச்சாட்டு
Uralvagonzavod என்பது உலகின் மிகப்பெரிய இராணுவ டாங்கி உற்பத்தி நிலையங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில், அங்கு பணிபுரிந்த முகமெடோவ் மற்றும் அவரது மனைவி இராணுவ மற்றும் தொழில்நுட்ப தகவல்களை வழங்கியதாக” குற்றம் சாட்டப்பட்டு 2023 இல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இவ்வாறானதொரு பின்னணியில், தன் குற்றத்தை ஓரளவு ஒப்புக்கொண்டதால் முகமெடோவிற்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை அவரது மனைவி விக்டோரியா முகமெடோவிற்கும், ஒக்டோபர் தொடக்கத்தில் இதே குற்றச்சாட்டில் 12.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.