வடகொரிய பெண் அமைச்சரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிய புடினின் செயல்
ரஷ்ய ஜனாதிபதி புடின், தன்னை சந்திக்கவந்த வடகொரிய பெண் அமைச்சரை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியதைக் காட்டு காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
பெண் அமைச்சரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிய புடின்
வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்பு, உக்ரைன் ரஷ்யப்போரில் வடகொரிய படைவீரர்கள் பங்கேற்பது வரை சென்றுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், சமீபத்தில் வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
தன்னை சந்தித்த வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சரான Choe Son-huiயின் கையை இறுகப்பற்றிக்கொண்டார் புடின்.
பொதுவாக, நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும்போது தங்கள் வலிமையைக் காட்ட, இதுபோல இறுக கைகளைப் பற்றிக்கொள்வதுண்டு.
Chilling moment Putin clings on to North Korea official's hand pic.twitter.com/bRoom8Euib
— The Sun (@TheSun) November 5, 2024
ஆனால், வடகொரியாவிலோ தங்களை சந்திக்க வருவோரின் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளும் வழக்கம் பரவலாக கிடையாது.
புடின் Choe Son-huiயின் கையை இறுகப்பற்றிக்கொண்டதுடன், அவரது முகத்தையே பார்த்து, புன்முறுவலுடன் பேசிக்கொண்டே இருந்தார்.
சுமார் ஒரு நிமிடத்துக்கு அவர் Choe Son-huiயின் கையை விடவும் இல்லை, அவரது முகத்திலிருந்து தன் கண்களை விலக்கவும் இல்லை.
புடின் தன் கையை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டதால் சற்றே குழப்பமடைந்த Choe Son-hui, தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார்.
அதை அவரது முகமே காட்டிக்கொடுக்க, அவர்களை சுற்றி நின்றவர்களும் விழித்துக்கொண்டிருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளீயாகிவருகின்றன.