தேர்தலுக்கு பிந்தைய முதல் கருத்துக்கணிப்பு வெளியானது… வெற்றி உறுதி என டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய முதல் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
வெற்றி உறுதி என நம்பிக்கை
பெரும்பாலான வாக்காளர்கள் ஜனநாயகம், பொருளாதாரம், குடியேற்றம் மற்றும் கருக்கலைப்பு தொடர்பில் தங்கள் கவலைகளை பதிவு செய்துள்ளனர். கமலா ஹரிஸ் மற்றும் டொனால்டு ட்ரப்ம் ஆகிய இருவரும் வாக்கு எண்ணிக்கை முடிவடைய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த நிலையில், சில மணிநேரங்களுக்கு முன்பு வாஷிங்டனில் தனது ஊழியர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து கமலா ஹரிஸ் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அதே வேளை ட்ரம்ப் வாக்களிப்பதற்காக புளோரிடாவில் உள்ள வாக்குச் சாவடிக்கு இன்று பகல் சென்றுள்ளார். 78 வயதான டொனால்டு ட்ரம்ப் வெற்றி உறுதி என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால், ட்ரம்பை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஹரிஸ் அணி உள்ளது. இந்த முறையும் போட்டி மிகுந்த பல மாகாணங்கள் வெற்றியை முடிவு செய்ய உள்ளது.
பலபேர்கள் பென்சில்வேனியா, ஜார்ஜியா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ஜனநாயகம் என்பது அமெரிக்கர்களுக்கு மிக முக்கியமான பிரச்சினையாக தரப்படுத்தப்பட்டுள்ளது,
தற்போதைய நிலை கவலை
35 சதவீத வாக்காளர்கள் இது அவர்களின் முக்கிய கவலை என்று கூறியுள்ளனர். பொருளாதாரத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக 31 சதவீத மக்கள் பதிவு செய்துள்ளனர்.
சராசரியாக 14 சதவீத வாக்காளர்கள் கருக்கலைப்பு மிகப்பெரிய பிரச்சினையாக தெரிவு செய்துள்ளனர். வெறும் நான்கு சதவீத வாக்காளர்கள் வெளியுறவுக் கொள்கையை தங்களின் மிக முக்கியமான பிரச்சினை என்று குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம் அதன் பின்னர் குடியேற்றம் மற்றும் ஜனநாயகம் பற்றி மிகவும் கவலை கொள்வதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் தெளிவுபடுத்தினர்.
ஆனால், ஜனநாயகம், கருக்கலைப்பு அதன் பின்னர் பொருளாதாரம் பற்றிய பிரச்சினைகள் குறித்து வலுவாக உணர்ந்துள்ளதாக ஹரிஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.