சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 637 வாகனங்கள் பல வருடங்களாக கொழும்பு மற்றும் ருஹுனுபுர துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் பழுதடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
இவற்றில் 188 வாகனங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மட்டக்குளியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் வாடகைக்கு எடுக்கப்பட்ட காணியில் 435 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலத்திற்கு ஆண்டுக்கு நான்கு கோடியே பதினெட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாடகை வாங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாகனங்களை ஏலம் விடுதல்
ருஹுணுபுர பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 202 ஆகவும் உள்ளது.
வாகனங்கள் ஓட்டிச்செல்வதற்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாகவும், வாகனங்களை ஏலம் விடுவதன் மூலம் நியாயமான தொகையை ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது
இவற்றில் பெரும்பாலான வாகனங்களுக்கான சோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை என சுங்கத் திணைக்களம் கணக்காய்வு அலுவலகத்திற்கு அறிவித்துள்ளதுடன், வாகனங்கள் குறித்து உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளது.