;
Athirady Tamil News

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்(Chandrika Kumaratunga) பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்

பாதுகாப்பு குறைக்கப்படவில்லை..
தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அப்படி எந்த நீக்கமும் செய்யப்படவில்லை. பாதுகாப்பு குறைக்கப்படவுமில்லை.

30 வரை குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அது தவறு. அவருக்கு தற்போது 57 பேர் வழங்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை வழங்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவை இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் நியாயமான முடிவெடுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேவையான பாதுகாப்பு மாத்திரம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமக்குரிய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சுமத்திய குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், தற்போது அவருக்கு 57 பணியாளர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தலா 100இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களும், பல்வேறு வாகனங்கள் மற்றும் நோயாளர் காவு வாகனங்கள் என்பனவும் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் இந்த சேவைகளுக்காக வருடாந்தம் 1,100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குகிறது வேறு எந்த ஒரு அரசு நிறுவனத்திற்கும் கூட இதுபோன்ற ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் மாற்றம் தேவை என அரசாங்கம் கருதுவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.