சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
அடுத்த 2 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
இன்றிலிருந்து(நவ. 6) சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் முதல் டெல்டா மாவட்டங்கள் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், ராமாநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நவ. 8 முதல் மழை ஆரம்பிக்கும்.
வங்கக்கடலில் புதிய காற்றாழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கான நேரம் வந்துவிட்டது. அதாவது சென்னை, புதுச்சேரி, கடலூர் முதல் ராமேஸ்வரம் வரை அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும். வரும் வெள்ளிக்கிழமை முதல் தென் தமிழகத்தில் மழை தொடங்கும்.
அடுத்த 2 நாள்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை மண்டலங்களில் மழை பெய்யக்கூடும்.
ராமாநாதபுரம் – தூத்துக்குடி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் நவ. 8 முதல் மழை பெய்யும். ஒருசில இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.