;
Athirady Tamil News

கனடாவில் இந்து – சீக்கியர் இடையே பிளவு இல்லை! காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கிளம்பிய பேரணி

0

கனடாவில்(Canada), காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றுபட்டு தெருக்களில் பேரணியில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்துக்களும் சீக்கியர்களும் எதிரிகள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை கனடா அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளனர்.

எனினும், அது உண்மையில்லை, தங்களை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றுபட்டு கனடா தெருக்களில் பேரணி நடத்தியுள்ளனர்.

தாக்குதல் சம்பவம்

அத்துடன், கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள இந்து மகா சபை கோவிலுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் காலிஸ்தான் பிரிவினைவாதிகளே தவிர சீக்கியர்கள் அல்ல என பாதிக்கப்பட்ட இந்துக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய வம்சாவளியினர் ஒருவர்,“ இந்துக்களும் சீக்கியர்களும் சகோதரர்கள், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சீக்கியர்கள் அல்ல, எனக்கும் சீக்கிய நண்பர்கள் உண்டு.

அவர்கள் ஒருபோதும் இப்படி இந்து வெறுப்பு காட்டுவதில்லை என்பதை கனேடியர்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்”என தெரித்துள்ளார்.

மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் இந்துக்களைக் காப்பாற்ற பீல் பகுதி காவல்துறையினர் தவறியதைத் தொடர்ந்து இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஈரானியர்கள் ஆகியோர் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு தங்கள் சமுதாயத்தினருக்கு ஆதரவு தெரிவிக்க வந்ததை நான் கண்ணால் பார்த்தேன் என கனேடிய ஊடகவியலாளரான Daniel Bordman என்பவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.