;
Athirady Tamil News

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்களில் மாற்றம்…!

0

பல அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

இதன்படி எரிபொருள், மின்சாரம், நீர் போன்றவற்றுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே காலி மாவட்ட வேட்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்
அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் குறைப்பதற்கான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது எரிபொருள், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றுக்கு அறவிடப்படும் கட்டணம் மிக அதிகமாக இருப்பதுடன் இதனால் சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வருமானம் ஈட்டும் போது விதிக்கப்படும் வரி இரண்டு இலட்சம் என்ற வரம்பிற்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.