;
Athirady Tamil News

டொனால்ட் ட்ரம்பின் தைரியம் தன்னை ஈர்த்துள்ளது! வெளிப்படையாக புகழ்ந்து வாழ்த்து தெரிவித்துள்ள புடின்

0

டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில்(Russia) நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை.

டொனால்ட் ட்ரம்பின் தைரியம்

எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.

ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது.

அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல்.

புடினின் வாழ்த்து

ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார்.

ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.