2024 பொதுத் தேர்தல்: வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்
பொதுத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் நாட்டின் அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதன் போது, வாக்களிப்பது அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமை, எனவே அனைவரும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மதிப்புமிக்க வாக்கு
தொடர்ந்தும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “வாக்களிப்பது என்பது அரசியல் சாசனமே உங்களுக்கு வழங்கிய உரிமை. எனவே, அந்த உரிமையைப் பயன்படுத்துவது உங்கள் கடமை.
வாக்களிப்பது உங்கள் உரிமை. வாக்களிப்பது உங்கள் சக்தி.எனவே உங்கள் மதிப்புமிக்க வாக்கைப் பயன்படுத்த 4ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை”வாக்குச்சாவடிகளுக்குச் செல்லுங்கள்.” என்றார்.
அஞ்சல் மூல வாக்களிப்பு
இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
இதன் மூலம், கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.