காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை : சவுதி இளவரசர் குற்றச்சாட்டு
காஸா(gaza) பகுதியில் இஸ்ரேல்(israel) இனப்படுகொலை செய்து வருவதாக சவுதி(saudi) இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
சவுதியின் ரியாத்தில் முஸ்லிம் மற்றும் அரேபிய தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை என்பது இனப்படுகொலை செய்யும் வகையில் உள்ளது. பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்பட விடாத வரை சவுதி அரேபியா, இஸ்ரேலை ஒரு போதும் அங்கீகரிக்காது. உடனே இப்போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.
அதேபோல் லெபனான்(lebanon) மீதான இஸ்ரேல் தாக்குதலையும் கண்டிக்கிறோம்.இதுதவிர இஸ்ரேல் ஈரானை குறிவைக்கிறது. இதை தடுத்து ஈரானின் இறையாண்மையை நிலைநாட்ட சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்.
சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் உள்ள நமது சகோதரர்களுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளை தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.