ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்: குடியுரிமைச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்துள்ளதைத் தொடர்ந்து முன்கூட்டியே தேர்தல் முதல், ஆட்சி மாற்றம் வரை, பல மாற்றங்கள் நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இரட்டைக் குடியுரிமைச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்?
ஜேர்மனியில், SPD, The Greens மற்றும் FDP ஆகிய கட்சிகள் இணைந்தே கூட்டணி ஆட்சி அமைத்தன.
ஆனால், நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த FDP கட்சியைச் சேர்ந்தவரான Christian Lindnerஐ ஜேர்மன்ச் ஏன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் பதவியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து கூட்டணி உடைந்தது.
ஆக, அடுத்து Friedrich Merz தலைமையில், CDU/CSU கட்சிதான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும் ஜேர்மனியைப் பொருத்தவரை, இப்போதைக்கு எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை.
இரட்டைக் குடியுரிமைச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஆகவே, தற்போதுள்ள கட்சி ஏதாவது ஒன்றுடன் இணைந்துதான் CDU/CSU கட்சி ஆட்சி அமைக்கமுடியும் என்ற நிலையே காணப்படுகிறது.
அப்படி இருக்கும்பட்சத்தில், இப்போதிருக்கும் கூட்டணி கொண்டுவந்த புதிய புலம்பெயர்தல் சட்டத்தில் மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது.
ஆக, இரட்டைக் குடியுரிமைச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்றே கருதப்படுகிறது.