முஸ்லிம் காங்கிரசின் கோட்டை தேசிய மக்கள் சக்தி வசம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாரம்பரிய அரசியல் கோட்டையாக கருதப்பட்டு வந்த கல்முனை தேர்தல் தொகுதி இம்முறை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோயுள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கடந்த 1994ம் ஆண்டு தொடக்கம் கல்முனைத் தொகுதி , அக்கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி முதலிடம்
கடந்த காலங்களில் மஹிந்த தரப்பின் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் இருந்த காலங்களில் கூட கல்முனை தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தது.
எனினும் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் கல்முனைத் தேர்தல் தொகுதியில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி முதலிடம் பெற்றுள்ளது
அங்கு தொடர்ச்சியாக வெற்றிக் கொடி நாட்டி வந்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெறும் ஒன்பதினாயிரம் வாக்குகளை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது