வடக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்த ரில்வின் சில்வா
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதோடு, வெற்றியின் பின்னணியில் உள்ள அனைவருக்கும், விசேடமாக வடக்கு மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் விகிதாசார வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் அரசியல் கட்சியொன்றுக்கு கிடைத்த அதிகூடிய ஆசனங்கள் இதுவாகும்.
159 இடங்கள்
225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி 159 இடங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், வெற்றியின் பின்னணியில் உள்ள அனைவருக்கும் எனது கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
விசேடமாக வடக்கு மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன் என்றும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.