;
Athirady Tamil News

மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி

0

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) சாதனையை முறியடித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, 655,289 என்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவடடத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

வரலாற்றில் இடம்பிடித்த வாக்கு எண்ணிக்கை
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக பிரதமர் ஹரிணி பெற்ற வாக்குகள் இடம்பிடித்துள்ளன.

இதற்கு முன்னர், நாடாளுமன்ற தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற இலங்கையின் அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணப்பட்டார்.

அவர், கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது குருநாகல் மாவட்டத்தில் 527,364 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், குறித்த சாதனையை இம்முறை இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமர் ஹரிணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.