ஜேர்மனியில் நெருங்கும் பொதுத்தேர்தல்: புதிதாக குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க முடியுமா?
ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்ததைத் தொடர்ந்து, சில மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதத்தில் இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த தேர்தலில் புதிதாக ஜேர்மன் குடியுரிமை பெற்றவர்கள் சிலருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
தேர்தலில் யாரெல்லாம் வாக்களிக்கலாம்?
ஜேர்மனியில் ஒருவர் தேர்தலில் வாக்களிக்கவேண்டுமானால், அவர் 18 வயதுடைய ஜேர்மன் குடிமகனாக இருக்கவேண்டும்.
அத்துடன், உங்களுக்கு 14 வயதானபின், குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது நீங்கள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும்.
ஜேர்மனியிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் வாழும் ஜேர்மன் குடிமக்கள், பெடரல் தேர்தலில் 25 ஆண்டுகள் வரை வாக்களிக்கமுடியும்.
இறுதியாக, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும்!