ஒரே ஒரு கப் லெமன் டீ-யில் எவ்வளவு நன்மைகள் இருக்குதுனு தெரியுமா?
ஒரே ஒரு கப் லெமன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதனை தண்ணீர் மற்றும் தேனுடன் சேர்த்தால் பானங்களில் ஒன்றாகும். பலர் காலையில் எலுமிச்சை கலந்த வெந்நீரைக் குடித்து மகிழ்கின்றனர்.
இப்படி காலையில் லெமன் டீ குடிப்பதால் உடலை ஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல் மாசுபாட்டை அகற்றவும் உதவுகிறது.
எடை இழப்பிற்கு நல்ல பலனை தருவதால் எலுமிச்சை தேநீர் பிரபலமடைந்து வருகிறது. தினமும் ஒரு கப் லெமன் டீ குடிப்பதால் என்ன பயன் என்பதை தெரிந்து கொள்வோம்.
நன்மைகள் என்ன?
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ள எலுமிச்சையில், டீ போட்டு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக அதிகரிக்குமாம்.
எலுமிச்சை டீ அசிடிட்டியைக் குறைப்பதுடன், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. மேலும் நீரிழிப்பைத் தடுக்கவும் இது உதவுகின்றது.
மேலும் ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தைப் பராமரிக்க உதவுகிறது.
எலுமிச்சை டீ வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவுகின்றது.