கணவரின் கண் முன்னே நடந்த துயரம்… உடல் கருகி மரணமடைந்த பெண்
பெருவில் விடுமுறைக்காக மலையேற்றத்தின் போது மின்னல் தாக்கி கணவர் கண்முன்னே பெண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவயிடத்திலேயே மரணம்
அர்ஜென்டினாவை சேர்ந்த 32 வயது Gabriela Daiana Basallo என்பவரே மின்னல் தாக்கி சம்பவயிடத்திலேயே மரணமடைந்தவர். பெருவின் குஸ்கோ பிராந்தியத்தில் அமைந்துள்ள சிவப்பு பள்ளத்தாக்கு மலைப் பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
அவரது கணவர் Samuel இதில் படுகாயமடைந்துள்ளார். விபத்தைத் தொடர்ந்து தீக்காயங்களுடன் கபிரியேலாவின் உடல் கிடந்ததை மீட்புப் படையினர் கண்டனர்.
பொலிசார் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நவம்பர் 12, செவ்வாய்கிழமை மதியம் இச்சம்பவம் நடந்துள்ளது. சுற்றுலா வழிகாட்டி ஒருவரே அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
அரசு சட்டத்தரணி அலுவலகம்
கபிரியேலாவுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். சம்பவத்தின் போது அவர்கள் மலையேற்றத்திற்குப் பிறகு ஒரு மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது மின்னல் கப்ரியேலாவைத் தாக்கியது என்றே கூறப்படுகிறது.
அவரது கணவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
கேப்ரியலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு மாற்றப்பட்டுள்ளது, சம்பவம் குறித்து அரசு சட்டத்தரணி அலுவலகம் விசாரணை முன்னெடுத்துள்ளது.