;
Athirady Tamil News

‘யாராலும் மாற்ற முடியாது’: டொனால்ட் ட்ரம்பை கேலி செய்த ஜோ பைடன்

0

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அமேசான் காடு குறித்து பேசும்போது டொனால்ட் ட்ரம்பை கிண்டல் செய்தார்.

அமேசான் சுற்றுப்பயணம்

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அவர் அமேசானியாவில் மழைக்காடுகளின் ஒரு பகுதி வழியாக நடந்து செல்வதற்கு முன், அமேசானில் ஹெலிகொப்டரில் பயணித்தார்.

பைடன் தனது பயணத்தின்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், “ஜனவரியில் நான் பதவியை விட்டு வெளியேறுகிறேன் என்பது ரகசியமில்லை” என்று குறிப்பிட்டார்.

உலகின் இதயமும், ஆன்மாவும்
அமேசான் காடு குறித்து பேசிய அவர், “எனது பார்வையில் நமது காடுகளும், தேசிய அதிசயங்களும் உலகின் இதயமும், ஆன்மாவும் ஆகும். அவை நம்மை ஒன்றிணைக்கின்றன. அவை நம்மை ஊக்குவிக்கின்றன.

அவை நம் நாட்டின் பாரம்பரியத்தை பெருமைப்படுத்துகின்றன. இப்போது வரலாறு நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. எனவே, இந்த புனித இடத்தை நம் காலத்திற்கும் என்றென்றும் பாதுகாப்போம் – அனைத்து மனிதகுலத்தின் நன்மைக்காக” என்றார்.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) குறித்து பைடன் பேசுகையில், “எனது பசுமையான பாரம்பரியத்தை யாராலும் மாற்ற முடியாது” என கிண்டல் செய்தார்.

புதைபடிவ எரிபொருட்களை முழுமையாகத் தழுவி ட்ரம்ப் ஒரு பிரச்சாரத்தை நடத்தியதை பைடன் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.