தொண்டை வலிக்கு மருத்துவரை அணுகிய பெண்: இறுதியில் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை!
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தொண்டை வலிக்காக மருத்துவரை அணுகிய போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் இல்லினாய்ஸ்(Illinois) பகுதியை சேர்ந்த 20 வயதான கேட்லின் யேட்ஸ்(Katelyn Yates) என்ற பெண் சாதாரண தொண்டை வலிக்காக மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது, தனது வாழ்க்கையை மாற்றும் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
தொண்டை வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற இல்லினாய்ஸ் கர்ப்பதற்கான எக்ஸ்-ரே பரிசோதனை செய்யும் நிலைக்கு ஆளானார்.
எடுக்கப்பட்ட கர்ப்ப பரிசோதனை முடிவுகள் அதிர்ச்சி தரும் விதமாக யேட்ஸ் 4 குழந்தைகளை ஒரே நேரத்தில் கருவுற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நான்கு குழந்தைகளை கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தும், யேட்ஸ் 4 குழந்தைகளை கருவில் சுமந்து அரிதான நிகழ்வை படைத்தார்.
சவாலான கர்ப்ப காலம்
ஆரம்பத்தில் கேட்லின் யேட்ஸ் மற்றும் அவரது காதலன் ஜூலியன் பியூக்கர் இந்த செய்தியால் அதிர்ச்சியில் இருந்தாலும், பின்னர் உற்சாகத்துடனும், தீர்மானத்துடன் முடிவுகளை ஏற்றுக் கொண்டனர்.
இருப்பினும், யேட்ஸின் கர்ப்பப் பயணம் சவால்கள் இல்லாமல் இல்லை.அவருக்கு பிரீகிளாம்சியா(preeclampsia) என்ற தீவிரமான கர்ப்ப சிக்கல் ஏற்பட்டது.
இதனால் யேட்ஸின் ஆரம்பகால பிரசவத்தை அவசியமாக்கியது, இறுதியில் அக்டோபர் 17ம் திகதி யேட்ஸ் தனது எலிசபெத் டெய்லர், எலியட் ரைக்கர், மேக்ஸ் ஆஷ்டன் மற்றும் சியா கிரேஸ் ஆகிய நான்கு குழந்தைகளையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
யேட்ஸ் மற்றும் பியூக்கர் நான்கு குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்படும் கணிசமான செலவுகளை ஈடு செய்ய Venmo இல் நிதி திரட்டலைத் தொடங்கியுள்ளனர்.