;
Athirady Tamil News

பெண்களுக்கு மூளைச்சலவை; ஈஷா மீது நடவடிக்கை – இந்திய கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்!

0

ஈஷா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.

ஈஷா மீது நடவடிக்கை
கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஈஷா அறக்கட்டளை, யோகா என்கிற பெயரில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த யோகா மையத்தில் பல்வேறு விதமான தவறுகள், பெண்களுக்கு எதிரான தவறுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சத்குரு வாசுதேவ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது.

பெண்கள் யோகா பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு மூளை சலவை செய்யப்படுகிறார்கள். குடும்பத்தினரையே அந்த பெண்கள் சந்திக்க மறுக்கிறார்கள். அண்மையில் லதா, கீதா என்ற பெண்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு அங்கு மொட்டை அடிக்கப்படுகிறது.

ஆர்பாட்டம் அறிவிப்பு

வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் ஊரார் வீட்டு மகள்கள் மொட்டை அடிக்கப்படுகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த நீதிமன்ற கேட்டுள்ளது. அங்கு ஆதிவாசிகள், பழங்குடி மக்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு ஈஷா மையத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிக்கை வருகிறது.

இங்கு பிரதமர், குடியரசு தலைவர், பிற மாநில முதலமைச்சர்கள், உயர் அரசு அதிகாரிகள் ஆகியோர் எல்லாம் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் வருவதால் ஈஷா மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுக்கப்படுகிறது. வெளி நாட்டில் இருப்பவர்கள் அங்கு அனுமதி பெற்று தங்கி உள்ளார்களா என்பது பற்றி தெரியாது. ஈஷா நிறுவனரை பாதுக்காப்பது ஒன்றிய அரசு தான்.

மணிப்பூரை பார்க்க பிரதமர் செல்லவில்லை. ஆனால் ஈஷா வருகிறார். ஈஷாவிற்கும் எங்களுக்கும் பகை கிடையாது. அங்கு நடக்கும் செயல்களை தான் கண்டிக்கிறோம். ஆளுநர் ரவி பற்றி என்ன சொல்வது என தெரியவில்லை. ஈஷா மீது பொது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அங்குள்ள பெண் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஈஷா நிறுவனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 23ம் தேதி கோவை சிவானந்தா காலனி பகுதியில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக” தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.