;
Athirady Tamil News

முதல் வெளிநாட்டு பயணம் : இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி அநுர

0

ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க(anura kumara dissanayake) டிசம்பரில் இந்தியாவிற்கு(india) விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath)தெரிவித்துள்ளார்.

இங்கையில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் அவரது முதல் வெளிநாட்டு பயணம் இந்தியாவாகத்தான் இருக்கும். இது கடந்த காலத்தில் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

இந்தியாவிற்கு முதல் பயணம்
அண்மைய காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa),மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena),கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) ஆகியோர் முதலில் இந்தியாவிற்கே தமது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இலங்கைக்கு இடர் நேர்ந்தபோதெல்லாம் ஓடோடிவந்து முதலில் உதவி செய்வதும் இந்தியாதான்.

அநுரவும் அதே வழி
அந்த வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மன்னாரில் அமைக்கப்படவிருந்த அதானியின் காற்றாலை மின்திட்டம் அநுர அரசில் மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவரது இந்திய விஜயத்தின்போது இந்த விடயம் கலந்துரையாடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.