;
Athirady Tamil News

7.44 காரட் வைரத்தை கண்டுபிடித்து பணக்காரரான விவசாயி.., 3 மாதங்களில் இரண்டாவது முறை

0

வைர சுரங்கத்தில் இருந்து விவசாயி ஒருவர் 7.44 காரட் வைரத்தைக் கண்டுபிடித்து பணக்காரர் ஆகியுள்ளார்.

வைரம் கண்டுபிடித்த விவசாயி

இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள வைர சுரங்கத்தில் இருந்து திலீப் மிஸ்ட்ரி என்ற விவசாயி ஒருவர் 7.44 காரட் வைரத்தைக் கண்டுபிடித்து கொடுத்து ஒரே நாளில் பணக்காரர் ஆகியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னாவில் பிரபலமான வைர சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு, எந்தவொரு இந்திய குடிமகனும் அரசு வைர அலுவலகத்தில் நிலத்தை ரூ.200க்கு குத்தகைக்கு எடுத்து வைர சுரங்கம் அமைக்கலாம்.

இங்கு கண்டுபிடிக்கப்படும் வைரத்தை எடுத்துக்கொண்டு பன்னா வைர அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி வைரத்தை மதிப்பாய்வு செய்வார்.

பின்னர், ஒரு சதவீதம் TDS தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை வைரம் கொண்டு வந்தவருக்கு கொடுக்கப்படும்.

அந்தவகையில், அகழாய்வுக்காக ஜரூப்பூர் பகுதியில் நிலத்தை திலீப் மிஸ்ட்ரி குத்தகைக்கு எடுத்துள்ளார். பின்னர் கடந்த 16 -ம் திகதி 7.44 காரட் வைரத்தை எடுத்து பன்னா வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளார்.

இதற்கு முன்பு இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16.10 காரட் வைரத்தைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இரண்டு வைரங்களும் ஒரே நேரத்தில் ஏலம் விடப்படும் என்று வைர அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அந்தவகையில், வைர அலுவலகத்திற்கு மொத்தமாக இதுவரை 228 காரட்கள் கொண்ட 79 வைரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 3.53 கோடி ரூபாய் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திலீப் மிஸ்ட்ரி கூறுகையில், “கொரோனா காலத்தின் போது, நானும் எமது கூட்டாளிகளும் தீவிர வைர தேடலில் ஈடுபட்டு வந்திருந்தோம்.

ஒரு வைரத்தைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி விவரிக்க முடியாதது. இந்த வைரங்கள் மூலம் கிடைக்கும் பணம், சுரங்கத்தின் விரிவாக்கத்திற்கும், நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.