உக்ரைனுக்கு AI டிரோன்கள் வழங்கும் ஜேர்மனி., Taurus ஏவுகணைகள் மறுப்பு
ஜேர்மனி உக்ரைனுக்கு 4,000 AI டிரோன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆனால், Taurus என்று அழைக்கப்படும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதில் ஜேர்மன் சேன்சலர் ஓலாப் ஷோல்ஸ் மறுப்பில் திடமாக இருக்கிறார்.
உக்ரைன் தொடர்ந்து Taurus ஏவுகணைகளை வழங்க கோரிக்கை விடுத்தது.
ஆனால், இவை ரஷ்யாவுக்குள் ஆழமான இலக்குகளை தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டால், அதனால் ஜேர்மனி நேரடியாக போரில் ஈடுபட வேண்டிய அபாயம் உண்டு என்பதால், இதை சேன்சலர் ஷோல்ஸ் மறுத்துள்ளார்.
இந்த AI டிரோன்கள் குறித்து ஜேர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கூறியதாவது:
– இந்த டிரோன்களால் எதிரியின் எலெக்ட்ரானிக் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க முடியும்.
– இவை 30-40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை.
ஜேர்மனியின் நிலைப்பாட்டுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், ஷோல்ஸ் மீதான விமர்சனங்களை முன்வைத்து, அவரை போர்க்காலத் தீர்மானங்களில் தன்மேல் பொறுப்பு ஏற்க தவறிவிட்டவராக சித்தரித்தார்.
ஜேர்மனி, உக்ரைனுக்கு இரண்டாவது பாரிய இராணுவ உதவி வழங்கும் நாடாக உள்ளதாலும், Taurus ஏவுகணைகளை வழங்க மறுப்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஜேர்மனியின் நிலைப்பாடு, எதிர்கால இராணுவ மற்றும் அரசியல் முடிவுகளில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.