;
Athirady Tamil News

இளவரசர் ஒருவரை சிறையில் தள்ளிய ஐரோப்பிய நாடு: தீவிரமடையும் விசாரணை

0

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகன் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள நிலையில், தற்போது ஒருவாரமாக சிறையில் உள்ளார்.

வன்கொடுமைக்கு இரையாக்கியதாக

குறித்த இளவரசருக்கு எதிராக மேலும் புகார்கள் குவிந்து வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே இளவரசரான 27 வயது Marius Borg Høiby என்பவரே இரண்டு பெண்களை வன்கொடுமைக்கு இரையாக்கிய வழக்கில் தற்போது சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் புதன்கிழமை வெளியான தீர்ப்பில், மரியஸ் போர்க் ஹோய்பி ஒரு வாரகாலம் சிறையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனிடையே பொலிசார் முன்னெடுத்துள்ள விசாரணையில், ஒரு பெண் அல்ல, இருவரை மரியஸ் போர்க் ஹோய்பி வன்கொடுமைக்கு இரையாக்கியதாக வெளிச்சத்துக்கு வந்தது.

பொலிஸ் தரப்பு தெரிவிக்கையில், இரண்டு வழக்கும் வன்கொடுமை அல்ல, துஸ்பிரயோகம் என குறிப்பிட்டுள்ளது. நோர்வே பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின் மகனான ஹோய்பி மூன்றாவது முறையாக திங்களன்று கைது செய்யப்பட்டார்.

முன்னதாக ஆகஸ்ட் மாதம் தனது முன்னாள் காதலியை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டார். அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு உடல் ரீதியான தீங்கு மற்றும் குற்றமாக கருதப்படும் அளவுக்கான சேதம் ஏற்படுத்தியது ஆகியவை ஆரம்ப குற்றச்சாட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உரிமம் இல்லாமல் வாகனம்

இதனிடையே செவ்வாயன்று பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், ஆகஸ்ட் மாதம் நடந்த சம்பவம் தொடர்பான சந்தேகங்களில் தற்போது குடும்ப வன்முறையும் அடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, தடை உத்தரவை மீறி தனது முன்னாள் காதலியைத் தொடர்பு கொண்டதாகக் கூறி செப்டம்பர் மாதம் அவரை மீண்டும் பொலிசார் கைது செய்தனர்.

திங்கட்கிழமை கைது செய்யப்பட்டது இரவு 11 மணிக்குப் பிறகு, அதே பாதிக்கப்பட்டவருடன் காரில் அவரைக் கண்டுபிடித்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மட்டுமின்றி, செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் நோர்வே அரச குடும்பம் கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.