அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடுவேன்: மிரட்டும் பிரான்ஸ் வலதுசாரிக்கட்சித் தலைவர்
பிரான்ஸ் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடுவதாக வலதுசாரிக்கட்சித் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
வலதுசாரிக்கட்சித் தலைவர் மிரட்டல்
2025ஆம் ஆண்டின் பட்ஜெட்டில், தனது National Rally (RN) கட்சியின் கருத்துக்களையும் கருத்தில் கொள்ளாவிட்டால் பிரதமர் மிஷெல் பார்னியேரின் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்போம் என அக்கட்சியைச் சேர்ந்த Marine Le Pen மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நிதியை மோசடி செய்த விடயத்தில் Marine Le Penக்கு பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு அவர் அரசியலில் ஈடுபட கட்டாயத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரியுள்ளார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சிக்கலில் சிக்கியிருக்கும் நிலையில் Marine Le Pen அரசைக் கவிழ்த்துவிடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், நீதிபதிகள் Marine Le Pen குற்றவாளி என்பதை உறுதிசெய்தால், அவர் 2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தடைசெய்யப்படும்.
விடயம் என்னவென்றால், அவர் 2027 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும் என்று பலர் நம்புகிறார்கள்.
ஆகவே, இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் Marine Le Pen, அரசைக் கவிழ்ப்பதற்கான தனது திட்டங்களை விரைவுபடுத்தக்கூடும் என்று கணித்துள்ளார்கள் அரசியல் நிபுணர்கள் சிலர்.