;
Athirady Tamil News

ஊர்காவற்துறையில் கன்றுத்தாச்சி மாட்டினை வெட்டியவர்கள் , மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பியோட்டம்

0

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை பகுதியில் கன்றுத்தாச்சி மாடொன்றினை இறைச்சிக்காக வெட்டியவர்களை ஊரவர்கள் கண்டு மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

மாட்டினை வெட்டி சென்றவர்கள் தப்பி சென்ற நிலையில் அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றும் , சுமார் 200 கிலோ எடையுடைய மாட்டிறைச்சியும் ஊரவர்களால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

ஊர்காவற்துறை , சுருவில் பகுதியில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை உயர் ரக கேப்பை இன கன்றுத்தாச்சி பசுமாட்டினை கடத்தி சென்று , ஆட்கள் அற்ற இடத்தில் அதனை வெட்டி , வயிற்றினுள் இருந்த கன்றினை வெளியே வீசி விட்டு , இறைச்சியை துண்டுகளாக வெட்டிக்கொண்டிருந்த வேளை ஊரவர்கள் அவ்விடத்தில் கூடி ,மாட்டினை வெட்டியவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை, தமது மோட்டார் சைக்கிள் , இறைச்சி என்பவற்றை கைவிட்டு விட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் , இறைச்சி என்பவற்றை மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் கன்றுத்தாச்சி பசு மாடொன்றினை கடத்தி , இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஊரவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் , தொடர்ச்சியாக தீவக பகுதிகளில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் சட்டவிரோத நடவடிக்கை அதிகரித்து செல்வதானால் அதனை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.