;
Athirady Tamil News

லண்டனில் திடீரென்று மூடப்பட்ட அமெரிக்க தூதரகம்… கேட்ட பயங்கர சத்தம்

0

லண்டனில் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஆயுதம் ஏந்திய பொலிசார் குவிக்கப்பட்டனர்.

அதிகாரிகள் உறுதி

லண்டனில் Nine Elms பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் திடீரென்று மொத்தமாக மூடப்பட்டது. வளாகத்திற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான வகையில் பொதி ஒன்று இருந்ததை அதிகாரிகள் உறுதிசெய்த பிறகு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திடீரென்று பயங்கர சத்தம் கேட்டதாக பொதுமக்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து ஆயுதம் ஏந்திய பொலிசார் குவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தூதரகம் அமைந்துள்ள பகுதிக்கு பொதுமக்களை இன்னமும் அனுமதிக்கவில்லை என்றும், தற்போதும் பொலிஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

லண்டன் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், Nine Elms பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நடந்த ஒரு சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் ஊகங்கள் பரவுவதை நாங்கள் அறிவோம்.

சந்தேகத்திற்கு இடமான பொதி

சந்தேகத்திற்கிடமான பொதியை அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் மேலதிக தகவல் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே சந்தேகத்திற்கு இடமான பொதி குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டன் பொலிசார் பகிரும் தகவல்களை கவனிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளதால், நெருக்கடியான சூழலைத் தவிர்க்க 156, 344 மற்றும் 436 சேவைகளுக்கான பேருந்து வழித்தடங்களை மாற்றியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.