;
Athirady Tamil News

மருத்துவமனை கழிப்பறையில் பிறந்த குழந்தையை நாய் கவ்வி செல்லும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சி

0

மருத்துவமனை கழிப்பறையில் 6 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்வி செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழிப்பறையில் பிறந்த குழந்தை

இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில், பங்குரா மாவட்டத்தில் உள்ள பெங்கால் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, அவர் அங்குள்ள கழிப்பறைக்கு சென்ற சமயத்தில் 6 மாத குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த நாய் ஒன்று பச்சிளம் குழந்தையை கவ்வி சென்றது.

இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த பெண், பிஷ்ணுபூர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனிடையே, உதவிக்காக அழைத்தபோதும் ஊழியர்கள் வரவில்லை என்று பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான பிரதிமா பூமிக் கூறுகையில், “வங்காளத்தில் உள்ள [பங்குராவில்] சோனாமுகியின் அதிர்ச்சிகரமான சம்பவம், மம்தா பானர்ஜியின் ‘உலகத் தரம் வாய்ந்த’ சுகாதாரத் தலைமையின் கீழ் உள்ள கடுமையான யதார்த்தத்தை அம்பலப்படுத்துகிறது.

கர்ப்பிணிப் பெண், கழிப்பறையில் மருத்துவ உதவியின்றி பெற்றெடுத்த குழந்தையை ஒரு தெரு நாய் கவ்வி செல்கிறது ” என்று கூறி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.