தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்
தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சிகளுக்கான புதிய அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சிக்கலான நிலைமைய எதிர்கொண்டுள்ளன.
இந்நிலையில், குறித்த அரசியல் கட்சிகள் தங்கள் செயற்குழுவில் கூடிக் கலந்துரையாடி, தேசியப் பட்டியல் தொடர்பில் இறுதி செய்யப்பட்ட பெயர்களை மட்டுமே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
உள்ளகப் பிரச்சினைகள்
அந்தந்த அரசியல் கட்சிகளின் உள்ளகப் பிரச்சினைகளை கட்சி மட்டத்திலேயே தீர்த்துக் கொள்ளுமாறும், தேர்தல்கள் ஆணைக்குழு அவற்றுக்குப்பொறுப்புக் கூற முடியாது என்றும் குறித்த அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தத்தமது உள்ளகப் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொண்டு தேசியப் பட்டியலுக்கான பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டுமே தவிர, அது தொடர்பான பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவை நாட வேண்டாம் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.