;
Athirady Tamil News

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காதோர் தொடர்பில் வெளியான தகவல்

0

சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தற்போது குறித்த இல்லங்களில் இருந்து தங்களது உடமைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டியிருப்பதால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளனர்

உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள்
இதன்படி நேற்று முன்தினம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த இல்லங்களில் இருந்து செல்லாவிட்டால், அவற்றுக்கு வழங்கப்படும் நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குசானி ரோஹணதீர, முன்னாள் உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிவெல வீடமைப்புத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக்கொள்வதற்காக, ஏற்கனவே 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.