12 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் ,நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் 12 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆற்றுப்படுகைகள்
- மல்வத்து ஓயா ஆற்றுப்படுகை
- கலா ஓயா ஆற்றுப்படுகை
- கனகராயன் ஆற்றுப்படுகை
- பரங்கி ஆறு ஆற்றுப்படுகை
- மா ஓயா ஆற்றுப்படுகை
- யான் ஓயா ஆற்றுப்படுகை
- மகாவலி ஆற்றுப்படுகை
- மதுரு ஓயா ஆற்றுப்படுகை
- முந்தெனியாறு ஆற்றுப்படுகை
- கலோயா ஆற்றுப்படுகை
- ஹடோயா ஆற்றுப்படுகை
- வில ஓயா ஆற்றுப்படுகை