கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், குறிகாட்டுவான் – நெடுந்தீவு இடையேயான படகு சேவைகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வரை இடம்பெற மாட்டாது
கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், குறிகாட்டுவான் – நெடுந்தீவு இடையேயான படகு சேவைகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வரை இடம்பெற மாட்டாது என்று நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் தெரிவித்துள்ளார்.
இன்று (25) காலை 7:00 மணி முதல் மறு அறிவித்தல் வரும்வரை குறித்த படகுச்சேவை இடம்பெற மாட்டாது என்று நெடுந்தீவு பிரதேசசெயலரால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.