கனடாவில் குடியேற விரும்புவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கனடாவில்(Canada) புதிதாக குடியேறுவோருக்கு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை கொண்டு மோசடிகள் பல இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடி, ரொறன்ரோவை மையமாகக் கொண்ட சட்டத்தரணி என்ற போர்வையில் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.
விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்டத்தரணி போன்றே உருவாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், அந்த செயற்கை நுண்ணறிவு காணொளி பிரபல குடிவரவு சட்டத்தரணி மெக்ஸ் சவுத்திரி என்பவரைப் போன்றே போலியாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு போலியான காணொளிகள் மூலம் மோசடிகள் பல இடம்பெறுவதாகவும் கனடாவிற்கு புதிதாக வந்தவர்கள் குடியேறுவதற்கு சாத்திருப்போர் இந்த விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.