கூகுள் மேப்பை நம்பி சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மூவர் பலியாகினர்.
கூகுள் மேப் காட்டிய வழி
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் இருந்து படாவுன் மாவட்டம் டேடாகஞ்ச் நோக்கி மூவர் காரில் பயணித்தனர்.
ஆற்றை கடக்கும் பலம் ஒன்றின் மீது கார் சென்றுள்ளது. கூகுள் மேப் காட்டிய அந்த வழியை நம்பி கார் பயணித்துள்ளது.
ஆனால், குறித்த பாலம் வெள்ளத்தினால் பாதி இடிந்து இருந்தது. அதனை அறியாமல் சாரதி காரினை ஓட்டியதால், சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது.
பரிதாப பலி
இந்த விபத்தில் காரில் இருந்து மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார், அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் சென்றவர்களில் இருவர் சகோதரர்கள் என தெரிய வந்தது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அப்பகுதியில் எச்சரிக்கும் தடுப்புகள் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.