பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டம்
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினுடய ஏற்பாட்டில் (JSAC) பால் நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டமானது “பாலியல் துன்புறுத்தலை நிறுத்துவோம் அனைவருக்கும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை உருவாக்குவோம், குரல் கொடுப்போம் ” எனும் தொனிப்பொருளின் கீழ் துண்டுப்பிரசுரங்களை வழங்கும் செயற்றிட்டமானது நேற்றைய தினம் (25.11.2024) மு.ப 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு குரல் கொடுக்கும் முகமாக இச் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இச் செயற்றிட்டத்தில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி.உ.தர்சினி , யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC) நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.