கிறிஸ்துமஸ் விளக்குகளை அமைத்த 24 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் 24 வயது இளைஞர் ஒருவர், கிறிஸ்துமஸ் விளக்குகளை அமைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பண்டிகை அலங்கார விளக்குகள்
சான் டியாகோவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் Antonio Pascual Mateo. இவர் கடந்த வியாழக்கிழமை அன்று Escondidoயில் அமைந்துள்ள தனது வீட்டின் கூரையில் பண்டிகை அலங்கார விளக்குகளை தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் அவர் கிறிஸ்துமஸ் விளக்குகளை அமைக்க முயற்சித்தபோது, உயர் மின்னழுத்த மின்கம்பிக்கு அருகில் இருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பாதிப்பிற்கு உள்ளான அவர் மரத்தில் தலைகீழாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
மின்சாரம் தாக்கி மரணம்
பின்னர் மீட்கப்பட்ட Antonio உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் Antonio உயிரிழந்துவிட்டதாக கூறினார்.
மருத்துவப் பரிசோதகர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆக்ரோஷமான உயிர்ப்பிக்கும் முயற்சிகள் இருந்தபோதிலும், அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரால் மரணம் அறிவிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.