புதிதாக 9 நாடுகளுக்கு Visa-Free Entry அறிவித்துள்ள ஆசிய நாடு
சீனா, தனது Visa-Free Entry திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, 9 புதிய நாடுகளை சேர்த்துள்ளது.
நவம்பர் 30 முதல், 38 தகுதியான நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் சீனாவுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
அதுமட்டுமின்றி, இதற்கான கால அவகாசம் 15 நாட்களாக இருந்த நிலையில், இப்போது 30 நாட்கள் வரை பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 2025 இறுதி வரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, கொரோனாவிற்கு பிறகு சீனாவின் சுற்றுலா துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
புதிய நாடுகளின் பட்டியலில் ஜப்பான் மற்றும் 8 ஐரோப்பிய நாடுகள் இடம்பிடித்துள்ளன. அவை, பல்கேரியா, ருமேனியா, கிரோயேஷியா, மாண்டேனேக்ரோ, நார்த் மாசிடோனியா, மால்டா, எஸ்டோனியா மற்றும் லாத்வியா.
ஜப்பான், சீனாவிற்கு விசா இல்லா அனுமதி பெற முன்பதிவுகளை செய்திருந்தது. 2003 முதல் ஜப்பானியர்களுக்கு சீனா விசா இல்லாமல் அனுமதி அளித்து வந்தது. ஆனால், 2020ல் கோவிட் காரணமாக இது நிறுத்தப்பட்டது.
சீனாவின் வெளிநாட்டுறவுத் துறை இந்த திட்டத்தின் பல்வேறு நன்மைகளை குறிப்பிட்டுள்ளது. இது, தொழில், சுற்றுலா, குடும்ப சந்திப்பு, கலாச்சார பரிமாற்றம் மற்றும் மாற்றுப்பயணங்களுக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.