;
Athirady Tamil News

7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

0

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கனமழை பெய்யும் என்பதால் திருவள்ளூா், விழுப்புரம், திருவாரூா், கடலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களால் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும்… இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.