;
Athirady Tamil News

தோழி வீட்டிற்கு சென்ற பிரித்தானியருக்கு கேட்ட குழந்தையின் சத்தம்: அதிரவைத்த காட்சி

0

பிரித்தானியர் ஒருவர் தனது தோழி வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அறை ஒன்றிற்குள்ளிருந்து குழந்தை ஒன்றின் குரல் கேட்டுள்ளது.

அறைக்குள் சென்ற அந்த நபர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தோழி வீட்டிற்கு சென்ற பிரித்தானியர் கண்ட அதிரவைத்த காட்சி
இங்கிலாந்திலுள்ள Cheshireஇல் வாழும் தனது தோழி வீட்டிற்குச் சென்றிருந்த ஒருவர், தற்செயலாக கழிவறையை உபயோகிக்க நேர்ந்துள்ளது.

அதற்காக அவர் மாடிக்குச் செல்ல, அறை ஒன்றிற்குள்ளிருந்து ஒரு குழந்தையின் குரல் கேட்டுள்ளது.

அறைக்குள் எட்டிப்பார்த்த அவர், கட்டிலின் கீழே பொருத்தப்பட்டுள்ள ட்ராவிலிருந்து (drawer) ஒரு குழந்தை எட்டிப்பார்ப்பதை கவனித்துள்ளார்.

உடனடியாக அது யார் என அவர் அந்தப் பெண்ணைக் கேட்க, மூன்று ஆண்டுகளுக்கு முன் தான் அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும், கணவருடன் சண்டை என்பதால் தான் கர்ப்பமுற்றிருப்பதை அவரிடம் மறைத்ததாகவும் தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.

மூன்று ஆண்டுகளாக ட்ராவுக்குள் வாழ்ந்த குழந்தை

அதாவது, அந்தக் குழந்தையை யாருக்கும் தெரியாமல் மூன்று ஆண்டுகளாக ட்ராவுக்குள் மறைத்துவைத்து வளர்த்துவந்துள்ளார் அந்தப் பெண்.

அவ்வப்போது அந்த அறைக்குச் சென்று சிரிஞ்ச் மூலமாக குழந்தைக்கு உணவு ஊட்டி, அதன் டயப்பரை மாற்றிவந்துள்ளார் அவர்.

அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நண்பர் உடனடியாக பொலிசாரை அழைத்துள்ளார்.

மருத்துவர்கள் அந்தக் குழந்தையை பரிசோதித்தபோது, மூன்று வயதான அந்தக் குழந்தை, 10 மாதக் குழந்தை போல காணப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளாக யாரையும் பார்க்காமல் வாழ்ந்த அந்தக் குழந்தையால், தவழவோ, நடக்கவோ, பேசவோ, ஏன் எந்த ஒலியும் எழுப்பி மற்றவர்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ளவோகூட இயலவில்லை.

கடுமையாக வளர்ச்சிக் குறைபாடு கொண்ட அந்தக் குழந்தைக்கு உணவு என்றால் என்ன என்று தெரியவில்லை, சிரிக்கத் தெரியவில்லை, மூன்று ஆண்டுகளாக தனது பிறந்தநாள் முதல் எந்த மகிழ்ச்சியான விடயங்களையும் அவள் அனுபவிக்கவில்லை.

2023ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், அந்தக் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அவருக்கு ஏழு ஆண்டுகள், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.