மாவடிப் பள்ளியில் இடம்பெற்ற அனர்த்தம்- உழவு இயந்திர சாரதி சடலமாக மீட்பு..!
video link-
கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி 12 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது யாவரும் அறிந்ததே.
இதன் போது உழவு இயந்திரத்தை செலுத்தி சென்ற சாரதியின் உறவினர்கள் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது பொலிஸார் குறித்த முறைப்பாட்டை சரியான முறையில் ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று குறித்த சாரதி விபத்தின் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தனது ஊடக அறிக்கையில் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதுவரை மீட்கப்பட்ட 07 சடலங்களில் குறித்த சாரதியின் சடலம் (உதுமாலெப்பை முகமது அகீத்(வயது-17) ) இன்று (28) வியாழக்கிழமை உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த உழவு இயந்திர சாரதி சடலமாக மீட்கப்பட்டமை அங்கு ஒரு வித பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளது.மீட்கப்பட்ட சாரதியின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.