தில்லியில் தனியார்ப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தில்லியின் பிரசாந்த் விஷார் பகுதியில் தனியார்ப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லியில் நேற்று பிரசாந்த விஹார் பகுதியில் உள்ள பிவிஆர் தியேட்டர் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில், இன்று ரோகினி பகுதியில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளிக்கு மின்னஞ்சலில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தில்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து, பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம், இந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், காலை 10.57 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் தில்லி காவல்துறைக்கு அழைப்பு வந்தது. தில்லி தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
மேலும், போலீஸ், வெடிகுண்டு செயலிழப்பு படை, நாய் படை, டிஎப்எஸ் பணியாளர்களுடன் சேர்ந்து பள்ளியின் முழு வளாகத்தையும் சோதனையிட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையைத் துவக்கியுள்ளனர் என்றார்.