;
Athirady Tamil News

6 பேருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு நீதிமன்றம்

0

நாரஹேன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய வழக்கின் பிரதிவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு, நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் மரண வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரைக் கொலை செய்து மற்றுமொருவரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளிகள் ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே 6 பேருக்கு மரண தண்டனை வித்தி தீர்ப்பளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.