தூக்கியெறியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம்: மீண்டும் நெதன்யாகு விடுத்த மிரட்டல்
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தான் கையெழுத்திடவில்லை என இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
இது வெறும் ஒரு போர்நிறுத்தம் மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, போர்நிறுத்தத்தை மீறும் எந்தவொரு வேளையிலும் லெபனானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்க இஸ்ரேல் இராணுவம் தயாராக இருக்கும் என்றும் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
ஹிஸ்புல்லா – இஸ்ரேல் போர்
இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஓராண்டாக நீடிக்கும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக ஈரானின் ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட தொடங்கியது.
இதன்காரணமாக போர் வலுப்பெற்று ஈரான், லெபனான் வரையில் நீண்டு சென்றதை தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
போர்நிறுத்தம்
இந்த நிலையில், லெபனானில் இடம்பெற்றுவரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டுள்ளது.
இப்போதைக்கு, 60 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் இந்த போர்நிறுத்தம் தொடருமா என்பது குறித்து சர்வதேச ரீதியில் சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.