;
Athirady Tamil News

அலெப்போ நகரை கைப்பற்றிய சிரிய கிளர்ச்சியாளர்கள்: ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதல்

0

சிரிய கிளர்ச்சியாளர்கள் அந்த நாட்டின் அலெப்போ நகரத்தை(Aleppo) மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

முன்னேறும் சிரிய கிளர்ச்சியாளர்கள்

சிரிய அரசாங்கம் 2016ம் ஆண்டு அலெப்போ நகரத்தை கைப்பற்றிய பிறகு, முதல் முறையாக மீண்டும் சிரிய கிளர்ச்சியாளர்கள் படை அலெப்போ நகரத்தை கைப்பற்றியுள்ளனர் என போர் கண்காணிப்பாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதில்., ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(Hayat Tahrir al-Sham) என்ற இஸ்லாமிய போராளி குழுவின் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் படை அல்பெல்போ நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் புதன்கிழமை அதிர்ச்சி தாக்குதலை தொடங்கியவர்கள், வழியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை ஆக்கிரமித்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், சமீபத்திய தகவலின் படி, ரஷ்ய ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் இராணுவ உபகரணங்களை உள்ளடக்கிய பாரிய கிடங்கை சிரிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்,.

வடமேற்கு சிரியாவில் நடத்தப்பட்ட 3 நாள் இடைவிடாத தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 27 குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்ய விமானங்கள் தாக்குதல்

இந்நிலையில் சிரியாவின் இட்லிப்(Idlib) மற்றும் சர்மடா(Sarmada) பகுதிகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசுகின்றன.

உள்ளூர் ஊடகங்களின் தகவல் படி, ரஷ்ய வீரர்கள் வான்வழி தாக்குதல் மூலம் எரிவாயு நிலையத்தை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

இதில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் படுகாயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.