பழிக்குப்பழி… ஜேர்மன் ஊடகவியலாளர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ள ரஷ்யா
ரஷ்யா, ஜேர்மன் ஊடகவியலாளர்கள் இருவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.
பழிக்குப்பழி
சமீபத்தில் ஜேர்மனி, சேனல் ஒன் என்னும் ரஷ்ய தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவரை ஜேர்மனியை விட்டு வெளியேறுமாறு கூறியிருந்தது.
அதற்கு பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாகவே தற்போது ஜேர்மன் ஊடகவியலாளர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Maria Zakharova என்பவர் தெரிவித்துள்ளார்.
சேனல் ஒன் மீண்டும் ஜேர்மனியில் இயங்க ஜேர்மனி அனுமதித்தால்தான் ஜேர்மன் ஊடகவியலாளர்களுக்கு ரஷ்யாவில் பணிபுரிய அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.