;
Athirady Tamil News

யூரியூப்பில் உருட்டுற வேதாளங்களும், உண்மையை மறைக்கும் மொக்குகளும்! *புங்குடுதீவில் இப்படியா*??

0

யூரியூப்பில் உருட்டுற வேதாளங்களும், உண்மையை மறைக்கும் மொக்குகளும்! *புங்குடுதீவில் இப்படியா*??
————————————
இந்தக்கட்டுரை எழுதும்போது வீடில்ல, நுளம்பு வலையில்ல ஓசில கட்டிக்குடுத்த வீடு ஒழுக்கு, என்ர தம்பி வலிப்பு வந்து செத்துப் போயிற்றான் 5000 ரூபா நலம்புரிக் காசிலதான் மருந்து வேண்டுறன், பிள்ளையள் வாழுற காலத்தில உழைக்கிற காச வேண்ட மாட்டன் யாராவது ஒரு பைத்தியக்காரன் வீடு கட்டித்தந்தா வாழுவன் என்று உருட்டுற பொம்மினாட்டிகளின்ர மனுசன்மார் இப்ப மதுபானச்சாலையில கியூவில நிண்டு பியரையும் ஆகவிலை குறைஞ்ச நந்தனி (சாராயத்தின்ர பெயர்) காப்போத்தல் 780 ரூபாக்கு வாங்கி குடிச்சுட்டு குப்பிறக் கிடக்ககூடும்.

அதெல்லாம் எங்களுக்குத் தெரியா “சும்மா இருக்க சுதந்திரம் என்றால் அதிலயும் எனக்கு 100கிலோ என்ற கதைமாதிரி யூரியூப் காரனோ அல்லது யூரியூப் உருட்டுக்காரியோ வந்தா எங்களுக்கு ஒரு உதவியுமில்ல கூந்தலுமில்லை என்று கூவோணும்.. கோயிலுக்குச் செலவளிக்கிறாங்கள் எங்கட மனுசன்மார் குடிக்க தந்தா என்ன என்று கதறோணும் என சிலதுகள் காத்திருக்க கூடும்.

அட வெக்கங்கெட்ட மூதேவிகளே! ஏதோ உங்கட வீட்டுக்க மட்டுமா மழை வந்தது? வெள்ளம் ஏறினது? அதென்ன புங்குடுதீவில கோயிலுக்கு செலவளிக்கிறாங்கள் என்கின்ற கூப்பாடு??

புங்குடுதீவில உள்ள கோயில்களைக்கட்டி கும்பாபிஷேகம் செய்து குலதெய்வ வழிபாட்டு முறையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போவதோடு மட்டுமல்ல ஆலயங்கள் ஊடாக எவளவோ அறப்பணிகளையும் விளம்பரம் இல்லாமல் செய்து, மாணவர்களை அறநெறிகளையும் கற்பித்து வருகின்றார்களே உங்களுக்கு மண்டையுக்க களிமண்ணா இருக்கு?

கடந்தகால பேரிடர்களான கொரோனா, புரவிப்புயல் காலத்தில் உங்களுக்கு உதவி செய்த பெருமக்களும் அதே கோயில்காரர்கள் தான் என்பதை ஏன் மறைக்கின்றீர்கள் ? வாற யூரியூப்கார உருட்டர்கள் உங்களுக்கு ஒரு பணிஸ் துண்டாவது தந்திருக்கின்றார்களா? எனியாவது தருவார்களா?

புலம்பெயர் புங்குடுதீவு உறவுகள் உங்களுக்கு வீடு கட்டித்தரோணும் ஒழுகினா திருத்தியும் தரோணும் வேலியும் அடைச்சு மரம் நட்டும் தரோணும் ஆனால் நீங்கள் நீங்க உங்கட (நம்) வீடுதானே வடிவா வச்சிருக்கோணும் என்று யோசிக்கிறீங்களா? இல்லையே! இது என்ன மனநிலை?
எவன் என எங்கள் ஊரையும் ஊர்சார்ந்த கோயில்களையும் கோயில்சார்ந்த அறப்பணிகளையும் குறைகூறி குளிர்காய நினைக்கிறீங்களோ உங்களுக்கும் எனி செருப்படிதான்.
*மொக்குகளே திருந்துங்கள், இல்லாவிட்டால் திரத்தப்படுவீர்கள் ஊரை விட்டே*….
-வித்தகன்-

YouTube உருட்டர்களும், புங்குடுதீவும்.. *கடலினுள் மூழ்கியதாம் புங்குடுதீவு* இது எப்படி இருக்கு??

You might also like

Leave A Reply

Your email address will not be published.