;
Athirady Tamil News

அதிக செலவுகளை கொண்டுள்ள சொகுசு வாகனங்களை அகற்ற தீர்மானம்

0

அரச நிறுவனங்களுக்கு அதிகளவான செலவுகளை கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைப்படி பாவனையில் இருந்து அகற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒரு சில அதிசொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கு செலவாகும் அதிகளவான தொகையை கருத்தில் கொண்டு, அவ்வாாறான வாகனங்களை பாவனையிலிருந்து அகற்றுதல் பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக அமையுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களில் காணப்படுகின்ற வானங்கள் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொண்டு, சுங்க இயைபு முறைக் குறியீடு (HS Code) 87.03 இன் கீழுள்ள பெற்றோல் 1800 CC கொள்ளவுக்கு அதிகமாக வாகனங்கள் மற்றும் 2300 CC கொள்ளளவுக்கு மேற்பட்ட டீசல் இயந்திரங்களைக் கொண்டுள்ள வாகனங்கள்(டபள் கப் வண்டி /சிங்கல் கப் வண்டி /வான் /பஸ் வண்டி) முறையான பெறுகை முறையைக் கையாண்டு 2025.03.01 திகதிக்கு முன்னர் அந்தந்த பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தர்கள் மூலம் பாவனையிலிருந்து அகற்றுவதற்கும்,

அதற்கிணங்கி நடவடிக்கைகள் மேற்கொண்டு திறைசேரியின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சுற்றறிக்கை மூலம் ஆலோசனை வழங்குவதற்காக திறைசேரி செயலாளருக்கு அதிகாரத்தை ஒப்படைப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.