சொந்த ஹொட்டலிலும் Bill Pay பண்ண ரத்தன் டாடா.., அவரின் எளிமை குறித்து தெரியாத தகவல்கள்
இந்தியாவின் முன்னணி தொழில்துறைகளில் சிறந்து விளங்கிய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் எளிமை குறித்த தகவல்களை பார்க்கலாம்.
ரத்தன் டாடா பற்றிய தகவல்கள்
மறைந்த டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வணிக உலகில் மட்டுமல்லாமல், மனித நேயத்திற்கும், சமூக சேவைகளுக்கும் பெயர் பெற்றவர். மேலும் அவர், எளிமையான வாழ்க்கையை வாழ விரும்பினார். அதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி பிறந்த ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் இந்த ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி மறைந்தார்.
இவர், இந்தியாவின் தனியார் தொண்டு நிறுவனங்களான ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் டோராப்ஜி டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தார்.
இவரை பற்றி பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஷைலேஷ் கோட்டாரி, புத்தகங்கள் மற்றும் செய்திகள் தொடர்பாக ரத்தன் டாடாவுடன் பல நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் பழகி, அவருடன் நேரத்தைச் செலவிட்டது குறித்து தெரிவித்துள்ளார்.
மேலும், வணிக அதிபர்கள் மத்தியில் ரத்தன் டாடா தனித்து நிற்கும் ஒரு தனித்துவமான எளிமையைக் கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளார்.
அவர் தனது வீட்டில் லேண்ட்லைன் தொலைபேசிக்கு தனிப்பட்ட முறையில் பதிலளிப்பாராம். பல முக்கிய தொழிலதிபர்கள் அழைப்புகளைக் கையாளுவதற்குச் செயலர்களை நியமிக்கிறார்கள்.
ஆனால், ரத்தன் டாடாவின் செயல் அவரது அடிப்படை ஆளுமை மற்றும் மக்களுடன் நேரடியாக இணைவதற்கான விருப்பத்தை காட்டுகிறது.
இவர், மும்பையில் உள்ள ஆடம்பரமான பங்களாவில் வாழ விருப்பம் இல்லாமல், கொலாபாவில் உள்ள அவரது சாதாரண இரண்டு அறை குடியிருப்பில் தொடர்ந்து வசித்து வந்தார். இதன் மூலம் அவரது எளிமை தனியாக தெரிந்தது.
5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பு தான் தனது வயதை கருத்தில் கொண்டு ஒரு பங்களாவுக்கு மாறினார். இவர் வாசித்த வீட்டில் ஆடம்பர பொருட்களுக்கு இடமில்லை.
மேலும், டாடாவின் கீழ் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தபோதும், தனது சொந்த செலவுகள் உட்பட பில் செலுத்தி வந்துள்ளார். விமானப் பயணத்தின் போது சாதாரண வகுப்பில் பயணம் செய்துள்ளார்.