யாழில் 188 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாண கடற்பரப்பில் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 188 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
குருநகரை அண்டிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த மீன்பிடி படகொன்றை , சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் வழி மறித்த போது, படகில் இருந்தவர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடற்படையினர் படகினை பரிசோதித்த போது படகில் இருந்து சுமார் 188 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா , பயண பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து மீட்கப்பட்ட கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய படகினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.